தொழில்நுட்பம்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2018-07-17 09:32 GMT   |   Update On 2018-07-17 09:32 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyS10



ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மூன்று வேரியன்ட் ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 5.8 இன்ச் அளவில் மேம்படுத்தப்பட்ட ஐபோன் X மற்றும் 6.4 இன்ச் ஐபோன் X பிளஸ் வேரியன்ட் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவற்றில் 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் ஐபோன் மாடல்களில் அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதே அம்சம் கேலக்ஸி நோட் 10 அல்லது அதன்பின் 2019-ம் ஆண்டு வாக்கில் வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே ஐபோன் வடிவமைப்பை சாம்சங் திருடிவிட்டதாக பல ஆண்டுகளாக நிலவி வந்த காப்புரிமை பிரச்சனையை தீர்த்து கொள்வதாக இரு நிறுவனங்களும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கொரியாவில் இருந்து வரும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 மாடலின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஐபோனுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இதே தகவல்களில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் ஐந்து கேமரா லென்ஸ்கள்: மூன்று பிரைமரி கேமரா, இரண்டு செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதன்படி புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 12 எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

இத்துடன் 2019-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவன எஸ்10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார வசதி இடம்பெறலாம் என கூறப்படுகிறது. சாம்சங் கேல்கஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள் 2019 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GalaxyS10 #smartphone
Tags:    

Similar News