என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Samsung"
- சாம்சங்கின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
- சாம்சங் போனிற்கு 4 ஆண்டுகள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A05 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள், 2 ஒ.எஸ். அப்கிரேடுகள் வழங்கப்படுகின்றன.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் எதுவும் வழங்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி A05 அம்சங்கள்:
6.7 இன்ச் 720x1600 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி G52 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்
64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யு.ஐ.
டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி A05 ஸ்மார்ட்போன் லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்வதாக தகவல்.
- இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஐபோன்களின் பேட்டரி பேக்கப் அதிகரிக்க சாம்சங் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் OLED பேனல்களை சாம்சங் நிறுவனமும் உற்பத்தி செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
அதன்படி OLED உற்பத்தியில் சாம்சங் மேற்கொள்ள இருக்கும் அதிரடி மாற்றம் காரணமாக ஐபோன்களின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வகை பொருட்கள் குறைந்த அளவு மின்திறனை எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வில் உருவாக்கப்படும் புதிய வகை பாகங்கள், ஏற்கனவே உள்ள OLED பாகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
2026 ஆண்டு வாக்கில் சாம்சங்கின் புதிய வகை தொழில்நுட்பம் தயார் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஐபோன் என்ற பெருமையை ஐபோன் 18 பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- என்ட்ரி லெவல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல்.
- மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மிட் ரேன்ஜ் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்சங் சார்பில் இந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி ஃபோல்டு சீரிஸ் மூலம் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கியது. பிறகு கேலக்ஸி Z ஃபோல்டு மற்றும் Z ஃப்ளிப் சீரிஸ் வரை தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. முதல் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு மாடலின் விலை 1980 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
பிறகு, இதன் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃபோல்டு 3 விலை சற்றே குறைக்கப்பட்டு 1799 டாலர்கள் என்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை 999 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. சமீபத்திய கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
2024 ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இதன் விலை 800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று கூறப்பட்டது.
எனினும், சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். "மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை, சமீபத்திய தகவல்களில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
- மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கிய முதல் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை ஐந்து தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேபோன்று சாம்சங் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனமும் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரென்ட்ஃபோர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஃபேன் எடிஷனை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்பட்டது. கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களின் ஃபேன் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- சாம்சங் ஃபிளாக்ஷிப் மாடல்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகின்றன.
- சியோமி நிறுவனம் சியோமி 14 ப்ரோ டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2024 ஆண்டுக்கான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவலில் கேலக்ஸி S24 சீரிசின் ஒரு மாடல் குறித்த மிகமுக்கிய தகவல் தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் டைட்டானியம் ஃபிரேம் முதல் முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிறகு, இதே பானியில் சியோமி நிறுவனமும் சியோமி 14 ப்ரோ மாடலின் டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனமும் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல் டைட்டானியம் ஃபிரேம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் 15 மில்லியன் டைட்டானியம் ஃபிரேம்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- இதன் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 ஆகும்.
- இந்த ஸ்மார்ட்போனினை மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிறம் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கிளாம்ஷெல் ரக ஃப்ளிப் போன் மாடலினை கிரீம், கிராஃபைட், மிண்ட் மற்றும் லாவெண்டர் என நான்கு நிறங்களில் அறிமுகம் செய்து இருந்தது.
கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.4 இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX8 சான்று, 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் எல்லோ நிற வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடியும், ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனினை மாதம் ரூ. 3 ஆயிரத்து 379 என்ற மாத கட்டணத்தில் மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.
- ஹெக்சா ஸ்கொயர் டிரேட்மார்க் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருந்தது.
- கேலக்ஸி S சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 432MP சென்சார் வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிகபட்சம் 432MP கேமரா சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுவரை அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் அதிகபட்சம் 200MP கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் இரண்டு 432MP சென்சார்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை ISOCELL HW1 மற்றும் HW2 பிராண்டிங் கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் 1-இன்ச் சென்சார்கள் ஆகும். 108MP மற்றும் 200MP சென்சார்கள் வரிசையில், சாம்சங் செமிகண்டக்டர்ஸ் நிறுவனம் சற்றே அளவில் பெரிய சென்சார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
டிப்ஸ்டர் ரெவக்னஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் ISOCELL HW1 மற்றும் HW2 சென்சார்கள் இரண்டும் 432MP ரெசல்யூஷன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெக்சா ஸ்கொயர் டிரேட்மார்க் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருந்தது. இவற்றில் 36:1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.
புதிய 432MP சென்சாரின் உற்பத்தி அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 2025 அல்லது 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி S சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 432MP சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- கேலக்ஸி S23 FE மாடல் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனினை ஒருவழியாக அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1 வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S23 FE அம்சங்கள்:
6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 730 GPU
ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 2200 பிராசஸர்
சாம்சங் எக்ஸ்-க்லிப்ஸ் 920 GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜிபி., 256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
12MP அல்ட்ரா வைடு சென்சார்
8MP டெலிபோட்டோ கேமரா, OIS
10MP செல்ஃபி கேமரா
வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3
4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் மின்ட், கிரீம், கிராஃபைட் மற்றும் பர்பில நிறங்களில் கிடைக்கிறது.
- சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய அறிவிப்பு மூலம் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்து 800 வரை குறைந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை திடீரென குறைத்து இருக்கிறது. விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி M13, கேலக்ஸி M04, கேலக்ஸி F13 மற்றும் கேலக்ஸி F04 என நான்கு மாடல்கள் பலன் பெற்றுள்ளன. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இவற்றின் விலை மேலும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி M04 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 6 ஆயிரத்து 499 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரம் குறைவு)
சாம்சங் கேலக்ஸி M04 (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) ரூ. 7 ஆயிரத்து 499 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரம் குறைவு)
சாம்சங் கேலக்ஸி M13 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 9 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரத்து 800 குறைவு)
சாம்சங் கேலக்ஸி M13 (6ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) ரூ. 11 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 1800 குறைவு)
சாம்சங் கேலக்ஸி F04 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 6 ஆயிரத்து 499 (பழைய விலையை விட ஆயிரம் ரூபாய் குறைவு)
சாம்சங் கேலக்ஸி F13 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 9 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 1,800 குறைவு)
சாம்சங் கேலக்ஸி F13 (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) ரூ. 10 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரத்து 800 குறைவு)

சாம்சங் கேலக்ஸி M13 மற்றும் F13 அம்சங்கள்:
இரு மாடல்களிலும் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 1080x2408 பிக்சல் ரெசல்யூஷன், வாட்டர் டிராப் நாட்ச், எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M04 மற்றும் கேலக்ஸி F04 அம்சங்கள்:
இரு மாடல்களிலும் 6.5 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கேலக்ஸி S23 FE இருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட்போனாக இருக்கும் நிலையில், இதன் வெளியீடு சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய கேலக்ஸி S23 FE மாடலின் வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனிற்கான டீசரை சாம்சங் இந்தியா வெளியிட்டு இருந்தது. டீசரில் அக்டோபர் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், சரியான வெளியீட்டு தேதி தொடர்ந்து ரகசியமாக உள்ளது. அந்த வகையில் தான் சாம்சங் அர்ஜென்டினா வலைதளத்தில் கேலக்ஸி S23 FE வெளியீட்டு தேதி லீக் ஆகி உள்ளது.
அதன்படி கேலக்ஸி S23 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் FE, கேலக்ஸி டேப் S9 FE போன்ற சாதனங்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும்.
புதிய கேலக்ஸி சாதனங்கள் வெளியீடு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தேதி சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் என்றே தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, 10MP செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.