என் மலர்
மொபைல்ஸ்

மிட் ரேஞ்சில் மிரட்டல் அம்சங்கள்... புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!
- ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.
- புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மீடியாடெக் பிராசஸருக்கு பதிலாக எக்சைனோஸ் 1330 SoC பிராசஸரால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது. இத்துடன் ஜெமினி லைவ் ஆப்ஷன் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
முந்தைய கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இந்த ஸ்மார்ட்போன் சற்று மெல்லியதாகவும் இலகுவாகவும் மாறியுள்ளது. மேலும் கேமரா வடிவமைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் சஃபையர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மாடலின் விலை ரூ.12,499 என்றும் 6GB + 128GB மாடலின் விலை ரூ.13,999 மற்றும் டாப்-எண்ட் 8GB + 128GB மாடலின் விலை ரூ.15,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி M17 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் .
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ. 500 வங்கி சார்ந்த கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் உள்ளது.






