தொழில்நுட்பம்
கோப்பு படம்

இன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்

Published On 2018-07-14 06:39 GMT   |   Update On 2018-07-14 06:39 GMT
இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான் அம்சம் ஒருவழியாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



இன்ஸ்டாகிராம் சேவையை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய சமூக வலைத்தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 270 கோடி பயனர்களுடன் ஃபேஸ்புக் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

சீரான இடைவெளியில் புதுப்புது அம்சங்களை வழங்கி வரும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஸ்டிக்கர் மூலம் கேள்விகளை ஸ்டோரியில் கேட்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் இல் அந்நிறுவனம் அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்து இருக்கிறது. 

இத்துடன் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக வெரிஃபை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் வெரிஃபிகேஷன் செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருக்கிறது.

ஆல்ஃபா ஆன்ட்ராய்டு அப்டேட் 55.0.0.0.33 மூலம் இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களது சாதனம் வழங்கும் சப்போர்ட்-க்கு ஏற்ப ஐகான் வடிவம் மாறும். முன்னதாக இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது. தற்சமயம் அடாப்டிவ் ஐகான் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இன்ஸ்டா ஐகான் வடிவம் மாறும்.



அனைத்து சாதனங்களிலும் புதிய அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும், எனினும் பயனர்கள் ஏ.பி.கே. மிரர் (APK Mirror) மூலம் முன்கூட்டியே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பொது மக்களும் வெரிஃபிகேஷன் பேட்ஜ் பெற விண்ணப்பிக்க எளிமையான வழிமுறையை இன்ஸ்டாகிராம் உருவாக்கி வருவாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சம் உருவாக்கப்படுவதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்திருப்பதாகவும், "இந்த அம்சம் மூலம் இன்ஸ்டா வாசிகள் தங்களுக்கான வெரிஃபிகேஷனை அவர்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும், இன்ஸ்டாவில் வெரிஃபைடு பெறும் வழிமுறையை புரிந்து கொள்ள முடியும். பொது மக்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்குவதன் மூலம் இன்ஸ்டாவாசிகளை பாதுகாக்க முடியும்." என இன்ஸ்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் வெரிஃபிகேஷன் பெற விண்ணப்பிக்கும் படிவம் சேர்க்கப்படுவதாகவும், இந்த படிவம் ஆஸ்திரேலியாவில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும், மேலும் சில பெயர் தெரிவிக்கப்படாத நாடுகளில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அம்சம் வரும் வாரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #instagram #InstaStories

புகைப்படம்: நன்றி Android Police
Tags:    

Similar News