தொழில்நுட்பம்
கோப்பு படம்

45 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை

Published On 2018-05-23 04:58 GMT   |   Update On 2018-05-23 04:58 GMT
பிஎஸ்என்எல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சுனாமி சலுகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ.499 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 45 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.509 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

மார்ச் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனம் ரூ.499 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் மாதம் 40 ஜிபி டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் 40 ஜிபி டேட்டா வழங்குகின்றன. 

பிஎஸ்என்எல் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகையில் டேட்டா ரோல்ஓவர் வசதி வழங்கப்படவில்லை. டேட்டா ரோல்ஓவர் வசதி பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதம் பயன்படுத்த முடியும். பிஎஸ்என்எல் தற்சமயம் அறிவித்துள்ள ரூ.499 சலுகையில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வழங்குவதை விட அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.499 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் காலிங் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய சலுகை எந்தெந்த வட்டாரங்களில் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக டேட்டா சுனாமி என்ற பெயரில் பிஎஸ்என்எல் ரூ.98 விலையில் சலுகையை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ரூ.98 விலையில் கிடைக்கும் இந்த சலுகையில் 26 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News