என் மலர்

  நீங்கள் தேடியது "Airtel"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவை வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.
  • 5ஜி வெளியீட்டுக்காக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

  5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சேவையை வழங்குவதற்காக பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் நோக்கியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமீபத்தில் தான் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், பல ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 084 கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.

  இது மட்டுமின்றி 5ஜி நெட்வொர்க் தொடர்பாக எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே 5ஜி சேவையை வெளியிட ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் துவங்க இருக்கும் நிலையில், எரிக்சன் நிறுவனத்துடன் சேர்ந்து நாடு முழுக்க கனெக்டிவிட்டி சார்ந்த சேவைகளை ஏர்டெல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது.

  மத்திய டெலிகாம் துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தற்கான ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்களில் வாங்கி இருக்கிறது.


  ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் இடையே 25 ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாடு முழுக்க பல தலைமுறை மொபைல் தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்த வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நிறைவு பெற்றதை அடுத்து இரு நிறுவனங்கள் இடையே புது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

  ஏர்டெல் நிறுவனம் எரிக்சன் ரேடியோ சிஸ்டம், எரிக்சன் மைக்ரோவேவ் மொபைல் டிரான்ஸ்போர்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீரான 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சார்ந்த சேவைகளை வழங்க இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாட்டின் 12 வட்டாரங்களில் ஏர்டெல் நிறுவனத்திற்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.140-க்கும் குறைவாகவே இந்த புது ரீசார்ஜ் பேக்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
  • இவை அனைத்தும் ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய ரீசார்ஜ் பேக்குகள் ஆகும்.

  ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிதாக நான்கு ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு பேக்குகள் ஸ்மார்ட் ரீசார்ஜ் என்கிற பிரிவின் கீழும், மற்ற இரண்டும் ரேட் கட்டர் பிரிவின் கீழும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.140-க்கும் குறைவாகவே இந்த புது ரீசார்ஜ் பேக்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  அதன்படி ரூ.109 மற்றும் ரூ.111 மதிப்புள்ள புதிய பேக்குகள் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வந்துள்ளது. இந்த பேக்குகள் மூலம் ரூ.99-க்கான டாக்டைம், 200 எம்.பி டேட்டா ஆகியவை வழங்கப்படுகின்றன. அழைப்புகளை மேற்கொள்ள ஒரு விநாடிக்கு ரூ.2.5 பைசா வசூலிக்கப்படும் என்றும் மெசேஜ் அனுப்பினால் ரூ.1 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  ஏர்டெல்லின் புதிய ரூ.128 பிளான் ஒரு மாத வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் அழைப்புகளை மேற்கொள்ள ஒரு ஒரு விநாடிக்கு ரூ.2.5 பைசா வசூலிக்கப்படும் வீடியோ கால் செய்ய ஒரு விநாடிக்கு ரூ.5 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல் இதன் ரூ.131 பேக்கிலும் ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ள விநாடிக்கு ரூ.2.5 பைசாவும், தேசிய வீடியோ கால்களை மேற்கொள்ள ரூ.1-ம் எஸ்.எம்.எஸ் அனுப்ப ரூ.1.5ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது.
  • அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், வெளியிட்டுள்ள அறிக்கையின் படி. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

  அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய்யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. 35.5 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்திலும், 31.61 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 22.68 சதவீதத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.


  ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

  புதிதாக 16.82 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 40.5 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணியில் உள்ளது. புதிதாக 8.1 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ஏர்டெல் நிறுவனம் 36.11 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுபுறம் 15.68 லட்சம் பயனர்களை இழந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்துள்ளது.

  பிராட்பேண்ட் சேவைகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 3.31 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 71 ஆயிரத்து 297 பிராட்பேண்ட் பயனர்களை பெற்றுள்ளது. பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 25.85 சதவீதமாகவும், ஏர்டெல் 23.54 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லைன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.51 கோடி அதிகரித்துள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் செல்போன் சேவைக்கு குறைவாக செலவிடுவதாக ஏர்டெல் தலைவர் அனில்மிட்டல் கூறியுள்ளார்.
  பார்தி ஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனம் அதன் ‘பிரீ பெய்டு’ சேவைக்கான செல்போன் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

  28 நாட்களுக்கு ரூ.79 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.99 என்றும், ரூ.149 கட்டணத்தை ரூ.179 எனவும், ரூ.219 கட்டணத்தை ரூ.265 ஆகவும் உயர்த்தியுள்ளது. 1 வருடத்துக்கு ரூ.2,498 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.2,999 ஆக அதிகரித்துள்ளது.

  இந்த கட்டண உயர்வு வருகிற 26-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

  இந்த நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 28 நாட்கள் கொண்ட குறைந்தபட்ச கட்டணம் ரூ.79 ஆக உள்ளது. அது ரூ.99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.149 கட்டணம் ரூ.179 ஆகவும், ரூ.219 கட்டணம் ரூ.265 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1 வருடத்துக்கான கட்டணம் ரு.2,399-ல் இருந்து ரூ.2,899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  வோடபோன் ஐடியா


  அதாவது 20 முதல் 25 சதவீதம் வரை கட்டண அறிவிப்பை வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகரித்துள்ளது. அன்லிமிடெட் அழைப்புகள் குறித்த திட்டங்களில் 20 சதவீதம் முதல் 23 சதவீதம் என்ற அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

  இது தொடர்பாக வோடபோன் ஐடியா தலைமை அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், “செல்போன் சேவை உயிர்ப்புடன் இருக்க கட்டண உயர்வு அவசியம்” என்றார்.

  ஏர்டெல் தலைவர் அனில்மிட்டல் கூறுகையில், “உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் செல்போன் சேவைக்கு குறைவாக செலவிடுகிறார்கள். சில மேற்கத்திய நாடுகளில் செல்போன் சேவைக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்.

  இந்தியாவில் இந்த தொகை ரூ.200 முதல் ரூ.300 வரையாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 200 ரூபாய்க்கு கீழ் மாதாந்திர கட்டணம் வைத்திருந்தால் யாரும் இந்த துறையில் நீடிக்க முடியாது என்றார்.

  இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘கிரிசில்’ கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்புள்ள 5ஜி ஏலத்தில் அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க செல்போன் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இதன் காரணமாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை மாற்றியமைத்து இருக்கிறது.


  ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது. தற்போது ஏர்டெல் பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் விலை ரூ. 99 முதல் துவங்குகின்றன. முன்னதாக ஏர்டெல் தனது ரூ. 49 சலுகையை நீக்கியது. இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படவில்லை.

  எஸ்.எம்.எஸ். பலன்கள் அடங்கிய சலுகை கட்டணங்கள் தற்போது ரூ. 179 முதல் துவங்குகின்றன. முன்னதாக இந்த சலுகை விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 219 சலுகையின் விலை தற்போது ரூ. 265 என மாறி இருக்கிறது. 

   கோப்புப்படம்

  ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல பிரீபெயிட் சலுகையான ரூ. 598 சலுகை கட்டணம் தற்போது ரூ. 719 என மாறி இருக்கிறது. இதில் பயனர்கள் 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா பெற முடியும். மற்ற பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

  புதிய விலை பட்டியல் நவம்பர் 26 ஆம் தேதி அமலுக்கு வரும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இதுவரை சலுகை கட்டணங்கள் விலையை உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது.


  பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 500 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். 

  தற்போது இதன் தினசரி டேட்டா அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இதே விலை கொண்ட சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. 

   ஏர்டெல்

  கூடுதல் டேட்டாவினை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதே சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் டிரையல் ஒரு மாதத்திற்கும், ஷா அகாடமி சந்தா ஒரு வருடத்திற்கும், இலவச ஹலோ டியூன் சந்தா, வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.  ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 விலை சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் 400 எம்.பி. கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூன்று சலுகைகளிலும் பயனர்களுக்கு முறையே 1.4 ஜி.பி., 1.9 ஜி.பி. மற்றும் 2.4 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.

  முன்னதாக ரூ.129 மற்றும் ரூ.249 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகளுடன் ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டது. ஏர்டெல் ரூ.499 சலுகையில் முன்னதாக தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் 400 எம்.பி. கூடுதல் டேட்டா தவிர ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

  இத்துடன் புதிய 4ஜி சாதனம் வாங்குவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இச்சலுகை கிடைக்கும். இதுதவிர நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.  ஏர்டெல் ரூ.448 சலுகையில் முன்னதாக 1.5 ஜி.பி.க்கு பதில் தினமும் 1.9 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இச்சலுகையும் 82 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதிலும் நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா, விண்க் மியூசிக் சந்தா மற்றும் கேஷ்பேக், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  ஏர்டெல் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டாவுக்கு பதில் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இச்சலுகையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் இதுவரை ஏர்டெல் வலைதளத்தில் மாற்றப்படவில்லை.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel  ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளை அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது. கடந்த வாரம் ரூ.299 விலையில் பிரீபெயிட் சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகையை ஏர்டெல் அறிவித்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.

  இதில் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

  இத்துடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏர்டெல் டி.வி. பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. இதில் ஜீ5, HOOQ, நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.  வாடிக்கையாளர்கள் ரூ.249 சலுகையை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும்.

  இத்துடன் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.129 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் டி.வி. மற்றும் வின்க் மியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Nokia  நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

  அறிமுகமானது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய விலை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.

  நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,750 குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. விலை குறைப்பை பெற வாடிக்கையாளர்கள் DEAL1750 குறியீடை பயன்படுத்த வேண்டும்.  விலை குறைப்பு மட்டுமின்றி ஏர்டெல் பயனர்களுக்கு கூடுதலாக ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கு பயனர்கள் ரூ.199, ரூ.249 அல்லது ரூ.448 சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது 240 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

  விலைகுறைப்பின் படி நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.8,849-க்கும், நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.13,749-க்கும் கிடைக்கிறது. இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய விலை நோக்கியா வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் பிரத்யேக குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மலிவு விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #Airtel  ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதாந்திர சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.48 விலையில் கிடைக்கும் ஒரு சலுகையில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

  ரூ.98 விலையில் கிடைக்கும் மற்றொரு சலுகையில் 6 ஜி.பி. டேட்டா மற்றும் 10 தேசிய எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.ரூ.48 சலுகையில் 3 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியும் ரூ.98 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.   28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் கட்டணம் ரூ.175 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. புதிய சலுகை தினமும் குறைந்தளவு டேட்டா பயன்படுத்துவோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏர்டெல் ரூ.248 விலையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய டெலிகாம் சந்தையில் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது. #RelianceJio  இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 2019 இல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  பிப்ரவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கியிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் இணைய வேகம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 4ஜி வேகம் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னணி இடம் பிடித்து வருகிறது. 

  அந்த வகையில் மார்ச் மாதத்தில் ஜியோ வழங்கிய டேட்டா வேகம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகமாகும். இத்துடன் 2018 ஆம் ஆண்டு முழுக்க வேகமான 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்தது.   பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் பிப்ரவரியில் 9.4Mbps ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் டேட்டா வேகம் 9.3Mbps ஆக இருந்தது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட போதும், டிராய் இருநிறுவனங்களின் விவரங்களை தனியாகவே வெளியிட்டிருக்கிறது. 

  வோடபோனின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் மார்ச் மாதத்தில் 7Mbps ஆக இருந்தது. ஐடியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5.6Mbps வேகம் வழங்கியிருக்கிறது. இருநிறுவனங்களும் பிப்ரவரி மாதத்தில் முறையே 6.8Mbps மற்றும் 5.7Mbps வேகம் வழங்கியிருக்கின்றன.

  வோடபோன் நிறுவனம் 4ஜி அப்லோட்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆக இருந்தது. ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆக இருந்தது. ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆக இருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print