search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    குறைந்தபட்ச ரிசார்ஜ் சலுகை விலையை மாற்றிய ஏர்டெல்
    X

    குறைந்தபட்ச ரிசார்ஜ் சலுகை விலையை மாற்றிய ஏர்டெல்

    • பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • இது மட்டுமின்றி தனது பிரீபெயிட் சலுகை மற்றும் அதன் பலன்களையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை உயர்த்தி இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட குறைந்தபட்ச ஏர்டெல் சலுகை விலை தற்போது 57 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய விலை ரூ. 155 என மாறி இருக்கிறது. இந்த சலுகை விவரங்கள் ஏர்டெல் ஹரியானா மற்றும் ஒடிசா மாநில வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    மேற்படி ரூ. 99 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையை ஏர்டெல் அதிரடியாக நீக்கி இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 200MB டேட்டா, அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது. தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில் ஏர்டெல் குறைந்தபட்ச ரிசார்ஜ் விலை ரூ. 155 ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

    தற்போது சோதனை அடிப்படையில் இந்த சலுகை இரு பகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது. சோதனை முடிவுக்கு ஏற்ப இந்த சலுகை நாடு முழுக்க வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 155-க்கும் குறைந்த விலையில் 28 நாட்கள் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்களை வழங்கும் அனைத்து சலுகைகளையும் நீக்க ஏர்டெல் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய மாற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண்ணை ஆக்டிவேட் செய்த நிலையில் வைத்திருக்க ரூ. 155 விலையில் ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். மாதாந்திர சலுகையில் எஸ்எம்எஸ் சேவையை பெறவாவது ரூ. 155 விலை சலுகையை ரிசார்ஜ் செய்வது அவசியமாகி விடும்.

    Next Story
    ×