search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSNL"

    • சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
    • மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 91 மற்றும் ரூ. 288 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் வேலிடிட்டி எதுவும் வழங்கப்படவில்லை.

    இரண்டு சலுகைகளும் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. எனினும், இவை சென்னை வட்டாரத்திற்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கிறது. அந்த வகையில், இந்த சலுகைகள் மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 91 சலுகையில் 600 எம்.பி. டேட்டா, 700 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. அந்த வகையில், பயனர்கள் ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையை கொண்டு இந்த சலுகையை ரிசார்ஜ் செய்ய வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 288 சலுகையில் 60 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதன்பிறகு டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி. என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகை தினமும் அதிகளவு டேட்டா எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்ற ஒன்று ஆகும்.

    • ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நகரும் செல்போன் டவர் அமைக்கப்படும் என்று ட்ராய் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஒரு நகரும் செல்போன் டவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    * நகரும் 2 செல்போன் டவர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டன.

    * ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    • வெள்ளம் காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
    • செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்ளில் பெய்த அதிக கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டன.

    சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பாதிப்பு காரணமாக செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

     


    இதன் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொலைபேசி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பெருமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 60 சதவீத பி.எஸ்.என்.எல். சேவை செயல்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு முழுக்க வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை வழங்குகிறது.
    • அவ்வப்போது சலுகை பலன்களை மாற்றுவதை பி.எஸ்.என்.எல். வழக்கமாக கொண்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கி வரும் ஒருவருட சலுகையில் வேலிடிட்டியை மாற்றியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம், விசேஷ நாட்களை ஒட்டி பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளில் வேலிடிட்டி நீட்டிப்பதை அவ்வப்போது செய்து வருகிறது.

    ரூ. 2 ஆயிரத்து 999 பி.எஸ்.என்.எல். ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினசரி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 40Kb-யாக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையின் வேலிடிட்டி முன்னதாக 365 நாட்களாக இருந்தது.

     


    அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் ரிசார்ஜ் வேலிடிட்டி 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். செல்ஃப் கேர் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் இதர பலன்களும் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. 

    • இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
    • இரு தரப்பினருக்கும் தைரியம் வரவழைக்கும் முயற்சி என மேலாளர் கூறினார்

    மலைமாநிலம் எனப்படும் வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பில் மழை, வெயில், பனி என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் மலைச்சரிவுகளால் பயணம் தடைபடாத வகையில் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன.

    அந்த சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இயந்திர கோளாறினால் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) ஒரு குழாய் வழியாக அந்த சுரங்கத்திற்குள் ஒரு தரைவழி தொலைபேசி சாதனத்தை (landline instrument) அனுப்ப தயார் நிலையில் உள்ளது. அதற்கு வேண்டிய தொலைத்தொடர்பு லைன்களை அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "இந்த சாதனத்தின் மூலம் சிக்கி கொண்டுள்ள பணியாளர்கள், வெளியே கவலையுடன் உள்ள அவர்களின் குடும்பத்தினருடன் பேசி கொள்ள முடியும். இது இரு தரப்பினருக்கும் ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கும்" என அம்மாவட்ட பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் (DGM) ராகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.

    பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த மீட்பு நடவடிக்கையை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி துரிதப்படுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ் சலுகைகளில் மட்டும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீபாவளியை கொண்டாடும் வகையில், பயனர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 251 ரிசார்ஜ் வவுச்சரில் பி.எஸ்.என்.எல். கூடுதல் டேட்டா வழங்குகிறது. இதுதவிர மற்ற ரிசார்ஜ் சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்குகிறது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 251, ரூ. 299 மற்றும் ரூ. 398 போன்ற ரிசார்ஜ் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது.

     

    பி.எஸ்.என்.எல். ரூ. 251 ரிசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள 70 ஜி.பி. டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வேலிடிட்டி முடிந்த பிறகு, கூடுதல் டேட்டா காலாவதியாகிவிடும். ரூ. 299 ரிசார்ஜ் செய்வோருக்கும் 3 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதனை பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி மூலம் அன்லாக் செய்துகொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 299 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதேபோன்று பி.எஸ்.என்.எல். ரூ. 398 வவுச்சரிலும் கூடுதலாக 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், வேலிடிட்டி முடியும் வரை 120 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

    • பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.
    • இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பால. சந்திரசேனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய பி.எஸ்.என்.எல். இணையதளத்தின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரிக்கப்படவுள்ளது.

    இந்த மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவை பெறுவதற்கு தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி மற்றும் 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள், சிறப்பு மேளா நடைபெறும் இடங்கள் மற்றும் பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.

    பி.எஸ். என்.எல் பைபர் இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் வெகுவிரைவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைகள் முழு அளவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது.
    • பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பிஜிபிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல். தயாராகி வருகிறது.

    அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் பாரத் முயற்சியின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறந்த 4ஜி தொழில்நுட்பம் மூலம் இந்த 4-வது தலைமுறை மொபைல் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக நெல்லை மாவட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்க இருக்கிறது.

    தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நவீன 4ஜி உபகரணங்களை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் பி.எஸ்.என்.எல்.-க்கு வழங்குகிறது.

    உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்ப உருவாக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள ஆய்வுப் பிரிவான சென்டர் பார் டிப்பார்ட்மென்ட் ஆப் டெலிமேடிக்ஸ் மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகியன முக்கிய பங்காற்றி வருகின்றன.

    உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 309 டவர்களும், 10 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்து டவர்களும 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி-க்கு எளிதாக மாற்ற கூடவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 46 புதிய 4ஜி டவர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். மொபைல் கவரேஜ் மேம்படுத்தப்படுகிறது. மொபைல் நெட்வொர்க் செயல்பாடு மற்றும் பிற இயக்க அளவீடுகளின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல். நெல்லை சமீபத்திய காலங்களில் இந்திய அளவில் உயர்ந்த இடத்தை பிடித்து வருகிறது. தற்போது புதிதாக திட்டமிடப்பட்ட நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம் முடிந்ததும் பி.எஸ்.என்.எல் மொபைல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும் சேவையின் தரமும் மிகவும் சிறப்பாக இருக்க தக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பி.எஸ்.என்.எல்.ன் இந்த மேம்பட்ட 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு, தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறம் இடங்களில் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் காலிங் சேவையை வழங்கும் புதிய சலுகையை அறிவித்தது.
    • புதிய பிஎஸ்என்எல் சலுகை மொத்தத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகள் வெவ்வேறு பலன்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

    இந்த சலுகை பயனர்களுக்கு வாய்ஸ் கால் சேவையை மட்டும் 90 நாட்களுக்கு வழங்குகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகை விலை ரூ. 439 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது.

     

    முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் மூலம் பயனர்கள் மாதத்திற்கு ரூ. 146 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம். இதன் மூலம் தினமும் ரூ. 4.80 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஒருவேளை நீண்ட கால வேலிடிட்டி வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,999 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. இதில் தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் பலன்கள், 600 ஜிபி அதிவேக டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும். 

    • பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 197 விலையில் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிகபட்சம் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

    அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை தேர்வு செய்ய விரும்புவோருக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பிஎஸ்என்எல் புதிய பிரீபெயிட் சலுகையின் விலை ரூ. 197 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இதில் 18 நாட்களுக்கு இலவச பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது டெலிகாம் துறையில் சலுகை விலை மற்றும் பலன் விவரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகையின் பழைய பலன்கள் மாற்றப்பட்டுவிட்டது.

    அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 197 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா (தினமும் 2 ஜிபி), 100 எஸ்எம்எஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பலன்களை பொருத்தவரை இந்த சலுகை தினசரி கட்டணம் ரூ. 2.80 என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இலவச பலன்களின் வேலிடிட்டி 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதன் பின் இவற்றை பயன்படுத்த கட்டணங்கள் வசூலிக்கப்படும். புதிய பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை பெரும்பாலான டெலிகாம் வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சில வட்டாரங்களில் இது வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு குறைந்த விலை சலுகையை வழங்கு வருகிறது.
    • குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை தினமும் 1 ஜிபி டேட்டா, வாய்ஸ் காலிங் போன்ற பலன்களை வழங்குகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 87 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் பிஎஸ்என்எல் உள்பட அனைத்து நிறுவனங்களும் தங்களின் சலுகை விலையை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் அனைத்து வட்டாரங்களிலும் தனது எண்ட்ரி லெவல் சலுகை விலையை ரூ. 155 ஆக உயர்த்திவிட்டது.

    அந்த வகையில் புதிய ரூ. 87 சலுகை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கால வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை வாய்ஸ் கால் மற்றும் டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகை வழங்கப்பட்டு வருவதால், பலரும் இதனை ஏற்கனவே பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

     

    பிஎஸ்என்எல் ரூ. 87 பலன்கள்:

    பிஎஸ்என்எல் ரூ. 87 சலுகை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஹார்டி மொபைல் கேம்ஸ்-இன் கேமிங் பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் மட்டும் இணைக்கப்படவில்லை. அந்த வகையில், இந்த சலுகை மொத்தத்தில் பயனர்களுக்கு 14 ஜிபி டேட்டா வழங்குகிறது.

    தினமும் 1 ஜிபி டேட்டா போதாத என்ற வகையில், பயனர்கள் ரூ. 97 விலை சலுகையை தேர்வு செய்யலாம். இந்த சலுகையிலும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் பலன்கள் வழங்கப்படவில்லை. எனினும், இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இது தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்கள் மொத்தத்தில் 30 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் 4ஜி சேவையை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் தனது சலுகை பலன்களை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 71, ரூ. 104, ரூ. 135 மற்றும் ரூ. 395 விலை சலுகைகளை நீக்கி இருக்கிறது. அதிக பிரபலமாக இல்லாதது மற்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் நான்கு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.

    நீக்கப்பட்ட சலுகைகளுக்கு மாற்றாக புதிய திட்டங்களை விரைவில் பிஎஸ்என்எல் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவையை இந்த ஆண்டும், 5ஜி சேவையை அடுத்த ஆண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் போது இவ்வாறு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

     

    பிஎஸ்என்எல் ரூ. 269 மற்றும் ரூ. 768 சலுகை விவரங்கள்:

    பிஎஸ்என்எல் புதிய ரூ. 269 மற்றும் ரூ. 769 சலுகைகள் ஃபெஸ்டிவல் தமாகா ஆஃபரின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் டியூன்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், லாக்துன் செயலிக்கான சந்தா, சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த சலகையின் வேலிடிட்டு 90 நாட்கள் ஆகும்.

    ×