என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Offers"
- அமேசான் வலைதளத்தில் லேப்டாப் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
- மேக்புக் ஏர் M1 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆண்டில் மேக்புக் ஏர் M1 மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 99 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு தற்போது அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அமேசான் வலைதளத்தில் இந்த லேப்டாப் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
அமேசான் வலைதள விவரங்களின் படி ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேக்புக் ஏர் M1 விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 990 என்று மாறி விடும். இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி முழு தொகை செலுத்தி வாங்குவோருக்கும், மாத தவணையில் வாங்குவோருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது மேக்புக் ஏர் M1 விலை ரூ. 79 ஆயிரத்து 990 என்று மாறிவிடும். மேக்புக் ஏர் M1 மாடல் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

மேக்புக் ஏர் M1 அம்சங்கள்:
13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் பிரைட்னஸ்
M1 சிப்செட்
8 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
தண்டர்போல்ட் 3
யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1, டிஸ்ப்ளே போர்ட்
3.5mm ஹெட்போன் ஜாக்
பேக்லிட் மேஜிக் கீபோர்டு
டச் ஐடி சென்சார்
வைபை, ப்ளூடூத், ஹெச்.டி. கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
15 மணி நேர பேக்கப்
30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்
- ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 15 தவிர ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிளாக் ஃபிரைடே சேல் பெயரில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான இன்வென்ட் ஸ்டோர் ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் ரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 8 ஆயிரம் வரை குறைந்துவிடும்.

அந்த வகையில், ஐபோன் 15 விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 71 ஆயிரத்து 900 ஆக குறைந்துவிடும். ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடியாகவும், ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வடிவிலும் வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.
அந்த வகையில், ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 60 ஆயிரத்து 900 என குறைந்து இருக்கிறது. ஐபோன் 14 ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதன்படி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 விலை ரூ. 39 ஆயிரத்து 400-க்கே கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 41 ஆயிரத்து 900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் ஜி.பி.எஸ். மற்றும் செல்லுலார் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என இருவித ஃபினிஷ்களில் கிடைக்கிறது.
- சிட்ரோயன் C3 மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- சலுகைகளின் பலன்கள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், சிறப்பு சலுகைகளை அறிவித்து இருந்தது. தற்போது சலுகைகளின் பலன்களை அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது.
சிட்ரோயன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களுக்கான சலுகைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட தற்போது ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும்.

சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 30-ம் வரை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஹூண்டாய் டக்சன், ஸ்கோடா கோடியக் மற்றும் வோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.
சிட்ரோயன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிட்ரோயன் C3 மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
- ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.
ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.
அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.
ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும்.
- வோக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
- சிறப்பு சலுகைகள் நவம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் புதிய வோக்ஸ்வேகன் கார் வாங்கும் போது தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி பலன்கள் வடிவில் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 60 ஆயிரமும், ரொக்க பலன்களாக ரூ. 60 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரொக்க பலன்கள் ரூ. 40 ஆயிரமும், எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இதே போன்று வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள் ரூ. 75 ஆயிரம் வரையிலும், எக்சேன்ஜ் போனஸ் ரூ. 75 ஆயிரமும், கார்ப்பரேட் பலன்கள் ரூ. 1 லட்சம் வரையிலும், விசேஷ பலன்களாக ரூ. 84 ஆயிரமும், ரூ. 86 ஆயிரம் மதிப்புள்ள நான்கு ஆண்டுகளுக்கான எஸ்.வி.பி. சேவையும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை 35 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
- ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே உள்ளது.
- ஐபோன் 14 ஏ15 பயோனிக் சிப்செட், 5-கோர் ஜி.பி.யு. கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 மாடலின் அம்சங்கள், ஐபோன் 13-க்கு இணையாகவே இருந்ததால் அதிக கவனம் பெறவில்லை. பலரும் இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் இருப்பதால், வாங்க வேண்டுமா என்ற நிலையில் இருந்தனர். தற்போது ஐபோன் 14 மாடலுக்கு அச்த்தலான தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் அங்கமாக ஐபோன் 14 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 43 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன் 14 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இது ஆப்பிள் வலைதள விலையை விட ரூ. 11 ஆயிரத்து 901 வரை குறைவு ஆகும். இதுதவிர எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 42 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து சலுகைகளையும் முழுமையாக பெறும் போது ஐபோன் 14-ஐ ரூ. 14 ஆயிரத்து 499-க்கு விலையில் வாங்கிட முடியும்.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், 5-கோர் ஜி.பி.யு., ஃபேஸ் ஐ.டி. 12MP டூயல் பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 மாடலிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
- கார்களுக்கு குறுகிய கால சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
வால்வோ இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு குறுகிய காலக்கட்டத்திற்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கி வருகிறது. அதன்படி வால்வோ XC60 மற்றும் வால்வோ XC40 ரிசார்ஜ் போன்ற மாடல்களுக்கு "ஃபெஸ்டிவ் டிலைட்" சலுகைகளின் கீழ் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சலுகை விவரங்கள்:
வால்வோ XC60 மாடலுக்கு ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வால்வோ XC60 விலை ரூ. 67 லட்சத்து 85 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 லட்சத்து 90 ஆயிரம் என்று குறைந்து இருக்கிறது. வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 78 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது.

முன்னதாக வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலின் கூப் வெர்ஷனாக வால்வோ C40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 61 லட்சத்து 25 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனிற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்பு.
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி.
ஒப்போ நிறுவனம் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது 120Hz டிஸ்ப்ளே, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு தற்போது 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
க்ரோமா வலைதளத்தில் ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனிற்கு 67.27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12 ஆயிரத்து 765 விலையில் கிடைக்கிறது.

இந்த விலை தவிர ஐ.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 8T அம்சங்கள்:
6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP ஜூம் கேமரா
32MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13
4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி மொபைல் போன் மாடல்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (நவம்பர் 2) துவங்க இருக்கும் பிக் தீபாவளி சேல்-இல் ஐபோன் மாடல்களுக்கு விசேஷ சலுகைகளை வழங்குகிறது.
அதன்படி ஐபோன் 14 மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வங்கி சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடி உள்ளிட்டவை அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் ஐபோன் 14 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ப்ளிப்கார்ட் சலுகை விவரம்:
தீபாவளி விற்பனையை ஒட்டி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்த டீசர் வலைபக்கத்தில் ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஐபோன் 14 குறைந்தபட்ச சலுகை விலை ரூ. 54 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வங்கி சலுகையாக ரூ. 4 ஆயிரமும், எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவற்றை சேர்த்தால், ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையிலேயே கிடைக்கும்.
மாத தவணையில் வாங்க விரும்பும் பயனர்கள் முதலில் ரூ. 19 ஆயிரத்து 999 மட்டும் செலுத்தி, மீதமுள்ள ரூ. 35 ஆயிரத்தை வட்டியில்லா மாத தவணை முறையில் திருப்பி செலுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி விலை நவம்பர் 2-ம் தேதி அமலுக்கு வருகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பல்வேறு பொருட்களுக்கும் அதிக சலுகைகள் வழங்கிய "பிக் பில்லியன் டேஸ்" சிறப்பு விற்பனை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், "பிக் தசரா சேல்" என்ற பெயரில் மற்றொரு சிறப்பு விற்பனையை ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. இதிலும் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. தற்போது ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், தற்போதைய விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 901 வரை குறைவு ஆகும்.

தள்ளுபடி மட்டுமின்றி கோடக் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சாதனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 31 ஆயிரத்து 150 வரை தள்ளுபடி பெற முடியும். ஐபோன் 14 மாடலின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 66 ஆயிரத்து 999 மற்றும் 86 ஆயிரத்து 999 விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றின் முந்தைய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 99 ஆயிரத்து 900 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஐபோன் 14 மாடல் பிராடக்ட் ரெட், புளூ, மிட்நைட், பர்பில் மற்றும் ஸ்டார்லைட் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.