என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  அமேசானில் ஸ்மார்ட்போன் அப்கிரேடு சேல் அறிவிப்பு
  X

  அமேசானில் ஸ்மார்ட்போன் அப்கிரேடு சேல் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாட்டின் முன்னணி ஆன்லைன் வலைதளமான அமேசான் ஏராளமான பொருட்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகை கொண்ட விற்பனையை நடத்தி வருகிறது.
  • பண்டிகை காலக்கட்டத்தில் அனைத்து பொருட்களுக்கும் அதிரடி சலுகை, விலை குறைப்பு கொண்ட விற்பனைகள் நடத்தப்பட்டன.

  அமேசான் இந்தியா வலைதளத்தில் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதமும் இதே போன்ற விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது டிசம்பர் மாதத்திறகான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  சிறப்பு விற்பனையின் அங்கமாக சியோமி, ஐகூ, ரியல்மி, டெக்னஓ, ஒப்போ மற்றும் லாவா நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியுடன் வாங்கிட முடியும். ரெட்மி A1, ஐகூ Z6 லைட், ரெட்மி 11 பிரைம் 5ஜி, டெக்னோ ஸ்பார்க் 9, ஒப்போ F21s ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 11 மற்றும் ரியல்மி நார்சோ 50i போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு வங்கி சலுகைகள் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகைகள் வழங்கப்படுகிறது.

  இன்று (டிசம்பர் 10) துவங்கி இருக்கும் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" சிறப்பு விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் வழங்கப்படும் சிறந்த சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

  சியோமி

  ரெட்மி A1 ரூ. 5 ஆயிரத்து 579 முதல்

  ரெட்மி 10A ரூ. 7 ஆயிரத்து 469 முதல்

  ரெட்மி 11 பிரைம் 5ஜி ரூ. 11 ஆயிரத்து 999 முதல்

  ரெட்மி நோட் 11 ரூ. 10 ஆயிரத்து 999 முதல்

  ஐகூ

  ஐகூ நியோ 6 ரூ. 26 ஆயிரத்து 999, 3 அல்லது 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி

  ஐகூ Z6 ப்ரோ ரூ. 19 ஆயிரத்து 999 முதல்

  ஐகூ Z6 லைட் ரூ. 12 ஆயிரத்து 499 முதல்

  டெக்னோ

  டெக்னோ பாப் 6 ப்ரோ ரூ. 5 ஆயிரத்து 579 முதல்

  டெக்னோ ஸ்பார்க் 9 ரூ. 7 ஆயிரத்து 649 முதல்

  டெக்னோ போவா 5ஜி ரூ. 14 ஆயிரத்து 299 முதல்

  டெக்னோ கேமான் 19 மாண்ட்ரியன் ரூ. 16 ஆயிரத்து 999 முதல்

  ரியல்மி

  ரியல்மி நார்சோ 50i ரூ. 5 ஆயிரத்து 499 முதல்

  ரியல்மி நார்சோ 50A பிரைம் ரூ. 8 ஆயிரத்து 999 முதல்

  ஒப்போ

  ஒப்போ F21s ரூ. 24 ஆயிரத்து 499 முதல், 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி

  ஒப்போ A76 ரூ. 15 ஆயிரத்து 490 முதல்

  ஒப்போ A77s ரூ. 16 ஆயிரத்து 999 முதல்

  லாவா

  லாவா பிளேஸ் NXT ரூ. 8 ஆயிரத்து 369 முதல்

  லாவா Z3 ரூ. 6 ஆயிரத்து 299 முதல்

  வங்கி சலுகைகள்:

  ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மாத தவணை முறைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வாங்கும் போது 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி பெறலாம். இதே போன்று ஃபெரடல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 1250 வரை தள்ளுபடி பெறலாம்.

  Next Story
  ×