உலகம்
அமெரிக்க ஏவுகணை சோதனை

உக்ரைன்- ரஷியா போர் எதிரொலி: அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ரத்து

Published On 2022-04-02 05:58 GMT   |   Update On 2022-04-02 05:58 GMT
எல்ஜிஎம்-30ஜி மினிட்மேன் 3 ஏவுகணையின் வழக்கமான சோதனைப் பயணத்தை மார்ச் 2022-ம் ஆண்டில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் ரஷியாவுடனான அணுசக்தி பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா தனது மினிட்மேன் 3 என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க விமானப்படை கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் ஆன் ஸ்டெபனெக் கூறியதாவது:-

எல்ஜிஎம்-30ஜி மினிட்மேன் 3 ஏவுகணையின் வழக்கமான சோதனைப் பயணத்தை மார்ச் 2022-ம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரஷியா - உக்ரைன் இடையேயான படையெடுப்பின்போது தவறான தகவல்தொடர்புகளைத் தவிர்ப்பதற்காகவும், அதிகப்படியான எச்சரிக்கையின் காரணமாகவும் ஏவுகணை சோதனை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அதே காரணத்திற்காக தற்போது ஏவுகணை சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது. எங்களின் அடுத்த திட்டமிடப்பட்ட சோதனை இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏவப்படும் என்று நம்பிக்கையுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. ஐகோர்ட்டுகளில் ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமனம்- சட்ட மந்திரி தகவல்
Tags:    

Similar News