search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு
    X
    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு

    ஐகோர்ட்டுகளில் ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமனம்- சட்ட மந்திரி தகவல்

    ஐகோர்ட்டுகளில் கடந்த ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் மத்திய சட்ட மந்திரி கூறினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

    கொலிஜியம் முறை மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.

    அதனால்தான், ஐகோர்ட்டு நீதிபதிகள் பெயரை பரிந்துரைக்கும்போது, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர், பெண்கள் என அனைத்து தரப்பினரின் பெயர்களையும் பரிசீலிக்குமாறு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அந்தவகையில், கடந்த ஓராண்டில் ஐகோர்ட்டுகளில் 39 பெண் நீதிபதிகள் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரைத்தது. அவர்களில் 27 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×