உலகம்
உக்ரைன் மரியுபோல் நகரம்

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது ரஷியா - உக்ரைன் குற்றச்சாட்டு

Published On 2022-03-06 02:41 GMT   |   Update On 2022-03-06 02:41 GMT
4 லட்சம் பேர் ரஷிய படையினரால் பிணைக் கைதிகளாக வைக்கப் பட்டுள்ளதாக மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் :

உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. 

இந்நிலையில் போர் நிறுத்ததை ரஷிய படைகள் மீறுவதாகவும்,  மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பு பாதை அமைப்பது மறுக்கப் படுவதாகவும் மரியுபோல் நகர மேயர் வாடிம் பாய்சென்கோ குற்றம் சாட்டியுள்ளார். 

அந்த நகரம் முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது, அதே நேரத்தில் 4 லட்சம் நகரவாசிகள் ரஷிய படையினரால் பிணைக் கைதிகளாக வைக்கப் பட்டுள்ளனர் என்றும், தி கீவ் இன்டிபென்டன்ட் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் மரியுபோல் நகர் மீது போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக பொதுமக்களை வெளியேற்றுவது ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் மேயர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடவடிக்கைகளை மாஸ்கோ மீண்டும் தொடங்கி உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News