செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-11-03 18:56 GMT   |   Update On 2021-11-03 21:14 GMT
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது என்பதை இப்போது சுகாதார துறையின் அங்கமான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை முறைப்படி பரிந்துரைத்துள்ளார்.

இதன் காரணமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வழிபிறந்துள்ளது. அமெரிக்காவில் 2 கோடியே 80 லட்சம் குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News