செய்திகள்
கோப்பு படம்

200 அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிப்பு

Published On 2021-08-31 10:16 GMT   |   Update On 2021-08-31 12:10 GMT
100 முதல் 200 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கலாம் என கருதுவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோனி பிளிங்கன் கூறி உள்ளார்.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த ராணுவமும் இன்று வெளியேறிவிட்டது.

கடைசி நேரத்தில் ஏராளமான வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை அமெரிக்காவால் அழைத்து செல்ல முடியவில்லை.

தற்போது அமெரிக்கர்கள் சிலரே கூட ஆப்கானிஸ்தானில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களால் உரிய நேரத்தில் விமான நிலையத்திற்கு வர முடியாமல் ஆங்காங்கே மாட்டிக் கொண்டார்கள்.

அதை மீறி வந்தால் பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என பயந்து தாங்கள் இருந்த இடத்திலேயே சிலர் பதுங்கிக் கொண்டனர். இதனால் அவர்களாலும் விமான நிலையத்துக்குவர முடியவில்லை.

 


இவ்வாறு 100 முதல் 200 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கலாம் என கருதுவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோனி பிளிங்கன் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள அமெரிக்கர்களையும், மற்றவர்களையும் தலிபான்கள் பத்திரமாக அனுப்பி வைப்பார்கள் என்று நம்புகிறோம். அவர்களை மீட்பதற்கு உரிய உதவிகளை அமெரிக்கா செய்யும்’’ என்றார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள 200 அமெரிக்கர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை தலிபான்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இல்லை என்றாலும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் விலகல்- முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்

Tags:    

Similar News