செய்திகள்
வாட்ஸ் அப்

தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

Published On 2021-08-18 02:34 GMT   |   Update On 2021-08-18 02:50 GMT
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான்  தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.

அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து பேஸ்புக் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News