செய்திகள்
வன்முறையில் தீப்பிடித்து எரியும் வாகனம்

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

Published On 2021-07-25 23:24 GMT   |   Update On 2021-07-25 23:24 GMT
கொரோனா பரவலைk கட்டுப்படுத்த அதிபர் மேக்ரான் தலைமையிலான பிரான்ஸ் அரசு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
பாரிஸ்:

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4-வது அலை எந்நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியாகச் சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 போலீஸ் அதிகாரிகளை போராட்டக்காரர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை போலீசார் மீது வீசி எறிந்தனர். அதேபோல் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர். தடியடியும் நடத்தினர். இதனால் பாரீஸ் நகரமே கலவர பூமியாக காட்சியளித்தது
Tags:    

Similar News