செய்திகள்
இம்ரான்கான்

ஹோலி பண்டிகை : பாகிஸ்தான் இந்துக்களுக்கு இம்ரான்கான் வாழ்த்து

Published On 2021-03-29 01:08 GMT   |   Update On 2021-03-29 01:08 GMT
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமாபாத்:

வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘நமது இந்து சமூகத்தினருக்கு வண்ணங்களின் பண்டிகையாம், ஹோலி பண்டிகை வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News