செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் - அதிபர் டிரம்ப் டுவிட்

Published On 2020-10-04 01:18 GMT   |   Update On 2020-10-04 01:18 GMT
ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

கொரோனா வைரசால் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் 3-ம் தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிபர் டிரம்ப் தீவிர பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வந்தார். 

இதற்கு மத்தியில் டிரம்பின் ஆலோசகர்  ஹோம் ஹிக்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிரம்பும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட டிரம்ப்,  கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.

டிரம்பின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டிரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். எனினும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். என்னைத் திரும்பப் பெற நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நான் திரும்பி வர வேண்டும், ஏனென்றால் நாங்கள் இன்னும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News