செய்திகள்
டிரம்ப், மோடி மற்றும் போல்சனேரோ

அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - கொரோனா அப்டேட்ஸ்

Published On 2020-08-05 01:00 GMT   |   Update On 2020-08-05 01:00 GMT
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 86 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 50 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

அதேபோல், பிரேசிலில் 56 ஆயிரத்து 411 பேருக்கும், அமெரிக்காவில் 54 ஆயிரத்து 215 பேருக்கும் நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 60 லட்சத்து 79 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 436 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 49,18,131
பிரேசில் - 28,08,076
இந்தியா -  18,55,746 
ரஷியா - 8,61,423
தென் ஆப்பிரிக்கா - 5,21,318
மெக்சிகோ - 4,43,813
பெரு - 4,39,890
சிலி - 3,62,962
ஸ்பெயின் - 3,49,894
கொலம்பியா - 3,34,979
Tags:    

Similar News