செய்திகள்
கோப்பு படம்

1 கோடியே 9 லட்சம் பேருக்கு கொரோனா

Published On 2020-07-03 00:50 GMT   |   Update On 2020-07-03 00:50 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 லட்சத்து 15 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 130 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 60 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 28,36,485
பிரேசில் - 15,01,353
ரஷியா - 6,61,165
இந்தியா - 6,04,641 
ஸ்பெயின் - 2,97,183
பெரு - 2,92,004
சிலி - 2,84,541
இத்தாலி - 2,40,961
ஈரான் - 2,32,863
மெக்சிகோ - 2,31,770
பாகிஸ்தான் - 2,17,809
துருக்கி - 2,02,284
Tags:    

Similar News