செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு

Published On 2020-05-03 08:04 GMT   |   Update On 2020-05-03 08:04 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நவாஸ் ஷெரீப் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் அங்கேயே சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கிய பாகிஸ்தான் கோர்ட்டு அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறவும் அனுமதி வழங்கியது. அதன்படி நவாஸ் ஷெரீப் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “கொரோனா வைரஸ் காரணமாக நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சற்றும் மோசமாக இருப்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரது சிகிச்சை தொடர்கிறது, அவருக்கு உங்கள் பிரார்த்தனை தேவை” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News