என் மலர்

  நீங்கள் தேடியது "Nawaz Sharif"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பின் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.
  • நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கி உள்ளது.

  கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீபுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. உடல்நல பாதிப்புக் காரணமாக சிகிச்சை பெற லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பின் நாடு திரும்பவில்லை.

  பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார். மேலும் நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டைடையும் ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கி உள்ளது.

  இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிததாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பதவி காலம் நிறைவு பெறுவதால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழி நடத்த வசதியாக லண்டனில் இருந்து அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி ஒருவரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த கட்சி ஒப்புக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர ஷபாஸ் அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  முன்னதாக தமது எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் லண்டன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். புதிய ராணுவ தளபதி நியமனம், பாகிஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது.
  • நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான அவர் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன.

  கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு ஜெயிலும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

  இதற்கிடையே உடல்நல பாதிப்புக் காரணமாக லண்டன் சென்று சிகிச்சை பெற லாகூர் கோர்ட்டில் அனுமதி கேட்டார். அவரது தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு லண்டன் செல்ல அனுமதி அளித்தது.

  இதையடுத்து 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அதன் பின் அவர் நாடு திரும்பவில்லை.

  இதற்கிடையே பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாய் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார்.

  நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியான பின்பு, அதனை புதுப்பிக்க அப்போது ஆட்சியில் இருந்த இம்ரான் கான் அரசு மறுத்து விட்டது.

  தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

  இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜாவேத் லத்தீப் கூறும்போது, "பாகிஸ்தான் அரசியலில் நவாஸ் ஷெரீப் இல்லாமல் ஒரு சமநிலை சாத்தியமற்றது. அவர் நாடு திரும்ப வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர் நாடு திரும்பியதும் மீண்டும் சிறைக்கு செல்ல பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நாவஸ்) கட்சி அனுமதிக்காது.

  பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவார். இம்ரான்கானை எதிர்த்து நிற்க அவர் அவசியம் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

  நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறும்போது, "எனது தந்தை நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் அவர் திரும்புவதற்கு சில சிக்கல்கள் தடையாக உள்ளது" என்றார்.

  இதற்கிடையே நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை நீக்க உதவும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வர ஷபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.

  இதன் மூலம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவதற்காக நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடல்நிலையை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல்-அஜிசியா ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் தனது உடல்நிலையை காரணமாக வைத்து ஜாமீன் கேட்டார். அதனால், கடந்த மார்ச் மாதம், அவருக்கு 6 வார கால ஜாமீன் அளிக்கப்பட்டது.

  6 வார காலம் முடிந்தவுடன், கடந்த 7-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்கு சென்றார். இந்நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி, தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பதற்றமும், மனஅழுத்தமும் நவாஸ் ஷெரீப்பின் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பை அவரது கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன. #NawazSharif
  லாகூர்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

  உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26-ந்தேதி முதல் 6 வாரத்துக்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

  அதன் பின்னர் தனக்கு நிரந்தர ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

  இதற்கிடையே அவரது ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அவர் கோட் லக்பத் சிறைக்கு மீண்டும் திரும்பினார். 

  அவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன.  முன்னால் சென்ற காரில் நவாஸ்செரீப் அமர்ந்து இருந்தார். அவருடன் மகள் மரியம், தம்பி மகன் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பட்டாசு மற்றும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.

  பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் கலந்து கொண்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணி இரவில் ஜெயிலை சென்று அடைந்ததும், சிறை அதிகாரிகளிடம் நவாஸ் ஒப்படைக்கப்பட்டார். #NawazSharif
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார். #NawazSharif #NawazBail #PMLNLeader
  லாகூர்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு (வயது 69), அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

  இதனை சுட்டிக்காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரீப்புக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கினர். பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து ஜாமீன் உத்தரவு லாகூர் சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. சிறை நடைமுறைகள் முடிந்து நவாஸ் ஷெரீப் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்தார். அவரை வரவேற்க சிறை வாசல் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். நவாஸ் காரில் புறப்பட்டுச் சென்றபோது பூக்களை தூவி வரவேற்றனர்.  சில தொண்டர்கள் நவாஸ் ஷெரீப்பின் கார் அவரது இல்லத்தை அடையும் வரை பின்தொடர்ந்து சென்றனர். வீட்டில் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் நவாஸை வரவேற்றனர். அவர் விரைவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NawazSharif #NawazBail #PMLNLeader

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Pakistan #NawazSharif
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

  இதையடுத்து அவருக்கு சிறைக்குள்ளேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து, உடல்நிலையை காரணம் காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார். #NawazSharif
  இஸ்லாமாபாத்:

  அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

  அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

  நவாஸ் செரீப் சார்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில், உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார் என அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். #NawazSharif
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  இஸ்லாமாபாத்:

  அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

  அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

  இந்த நிலையில் நவாஸ் செரீப் வக்கீல் கவாஜா ஹாரீஸ் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இந்த மனு மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 18-ந்தேதி நடைபெற உள்ளது. எனினும் “நவாஸ்செரீப்பின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதால் அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. #NawazSharif #Pakistan
  லாகூர்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் 24-ந் தேதி தீர்ப்பளித்தது.

  இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

  நவாஸ் செரீப்புக்கு இதய நோய் பாதிப்பு இருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பின் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

  இந்த நிலையில் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது டாக்டரும், இருதய நோய் நிபுணருமான அட்னன் கான் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

  நவாஸ் செரீப்பின் இருதய நோய் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  நவாஸ் செரீப்பை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்று ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை.

  இவ்வாறு அவர் கூறினார். #NawazSharif #Pakistan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு எதிரான இரு ஊழல் வழக்குகளில் ஒரு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #NawazSharif #Nawazimprisonment
  இஸ்லாமாபாத்:

  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
   
  ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

  பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.

  இதற்கிடையில், நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன.

  இவ்வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பை விடுவித்தும், அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அர்ஷத் முஹம்மத் மாலிக் உத்தரவிட்டார்.

  அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் நவாஸ் செரீபுக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளதால் இந்த தண்டனை விதிக்கப்படுவதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். #FormerPakistanPM #NawazSharif #Nawazimprisonment #AlAziziacase
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரிக்கிறது. #NawazSharif #Summon #SupremeCourt
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளில் சிக்கி தவிக்கிறார். அவரும் அவரது மகள் மரியம், மருமகன் கேப்டன் சப்தார், மகன்கள் ஹசன், உசேன் ஆகியோரும் ஊழல் செய்து குவித்த பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக ஊழல் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கலானது.  இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப் மகன்கள் ஹசன், உசேன் ஆகியோர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாத நிலையில் அவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

  நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் மீதான வழக்கை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு விசாரித்து, நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மரியத்துக்கு 7 ஆண்டு, கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

  அதையடுத்து அவர்கள் ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இருப்பினும், நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களும், ஜாமீன் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அத்தார் மினல்லா, மியான்குல் ஹசன் அவுரங்கசீப், அவர்கள் 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தனர். அவர்களுக்கு ஜாமீனும் வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

  ஆனால் அவர்களை ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

  அந்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வின் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அதை அவர்கள் விசாரணைக்கு ஏற்றனர்.

  மேலும் அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீனில் விடுவித்தது செல்லுமா என்பதுபற்றிய விசாரணையை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். முன்னதாக நடந்த முதற்கட்ட விசாரணையின்போது, நீதிபதிகளிடம் நவாஸ் ஷெரீப் தரப்பு வக்கீல் ஹாரிஸ், “நான் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகன் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறேன். எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி போட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

  அதையடுத்துதான் விசாரணை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி போடப்பட்டது.

  அப்போது தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் வேடிக்கையாக, “எனக்கு உடல் நலம் சரியில்லை. இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நீங்கள் (ஹாரிஸ்) ஆஜராவதால்தான் எனக்கு படபடப்பு அதிகமாக இருக்கிறது என்று எனது டாக்டர்கள் சொல்கிறார்கள்”என குறிப்பிட்டார்.

  அதைத் தொடர்ந்து கோர்ட்டில் எல்லோரும் சிரித்து விட்டனர். எனவே, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்தாகுமா என்பது அடுத்த மாதம் 12-ந் தேதி தெரிய வரலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print