செய்திகள்
கொரோனா வைரஸ்

பாகிஸ்தானில் 79 சதவீத கொரோனா தொற்று சமூக பரவல் மூலம் உருவானது - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

Published On 2020-04-25 08:03 GMT   |   Update On 2020-04-25 08:03 GMT
பாகிஸ்தான் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 79 சதவீதம் சமூக பரவல் மூலம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அங்கு வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 642 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 11,155 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 237 ஆக உயர்ந்துள்ளது. 2,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 79 சதவீதம் சமூக பரவல் மூலம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், மே மாத இறுதி மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News