செய்திகள்
ஜப்பானில் நிறுத்திவைக்கப்பட்ட சொகுசு கப்பல்

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-02-17 16:21 GMT   |   Update On 2020-02-17 16:21 GMT
ஜப்பானில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் மேலும் 99 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டர்வகளின் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோ:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசுக்கு இதுவரை 1770 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 70 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் நாட்டின் யோகாஹாமா நகரில் உள்ள துறைமுகத்திற்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து கப்பலில் பயணம் செய்த 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 'டைமெண்ட் பிரின்சஸ்’ கப்பலில் உள்ள பயணிகள் மேலும் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை ஜப்பான் சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனால் கப்பலில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 இந்தியர்களும் அடக்கம்.

இதற்கிடையில் 'டைமெண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் அமெரிக்காவை சேர்ந்த 340 பயணிகளை அந்நாட்டு தனி விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். 
Tags:    

Similar News