செய்திகள்
இ-விசா

கொரோனா வைரஸ் பீதி: சீனாவில் இருந்து இந்தியா வருவதற்கான இ-விசா முறை தற்காலிக ரத்து

Published On 2020-02-02 11:22 GMT   |   Update On 2020-02-02 11:22 GMT
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 305பேர் பலியான நிலையில் சீனாவில் இருந்து இந்தியா வருவதற்கான இ-விசா முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:

சீனாவில் சமீபத்தில் பெரும் பீதியை கிளப்பியதுடன் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சுமார் 25 நாடுகளுக்கு பரவியுள்ள கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 304 நோயாளிகள், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் என இன்றுவரை மொத்தம் 305 பேர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்து 562 பேர் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வருவதற்கான உடனடி ‘இ-விசா’ முறை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பீஜிங் நகரில் உள்ள சீனாவுக்கான இந்திய தலைமை தூதரகம் இன்று அறிவித்துள்ளது.



சீனாவை சேர்ந்த குடிமக்கள் மற்றும் இதர நாடுகளில் இருந்து வந்து, தற்போது சீனாவில் தங்கியுள்ளவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இந்தியா செல்வதற்கு இதற்கு முன்னர் சிலருக்கு ‘இ-விசா’ வழங்கப்பட்டிருந்தாலும் அவை இனி செல்லத்தக்கதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News