செய்திகள்
வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க முகமூடி அணிந்து செல்லும் மக்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் - பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

Published On 2020-02-02 02:04 GMT   |   Update On 2020-02-02 02:04 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், 14 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெய்ஜிங்:

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

இந்நிலையில், சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்தது. சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,430 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

புதிய கொரோனா வைரஸ் மேலும் 14 ஆயிரம் பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ் பாதிப்பை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Tags:    

Similar News