செய்திகள்
விபத்து நடைபெற்ற பகுதி

காங்கோ: தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலி

Published On 2019-12-16 12:32 GMT   |   Update On 2019-12-16 13:44 GMT
காங்கோ நாட்டில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில்  பல்வேறு தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. 

இந்நிலையில், அந்நாட்டின் ஹல்ட் உலி மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் 30-க்கும் அதிகமானோர் கடந்த சனிக்கிழமை ( டிசம்பர் 14) தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும் பணியை செய்துகொண்டிருந்தனர். 

இதற்கிடையில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு  ஏற்பட்டு தங்கச்சுரங்கத்தின் மேற்பரப்பு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 27 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிலர் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News