இந்தியா

இளைஞர்களின் புதிய உடற்பயிற்சி சவால்- வைரலாகும் வீடியோ

Published On 2024-05-10 07:14 GMT   |   Update On 2024-05-10 07:14 GMT
  • வைரலான சவால் குறித்த வீடியோ 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இளைஞர்கள் செய்யும் வித்தியாசமான உடற்பயிற்சி குறித்த காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது இளைஞர்கள் சிலர் ஒரு புதிய வகையிலான உடற்பயிற்சி சவாலுக்கு அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

'இறால் குந்து சவால்' என்ற பெயரில் பரவி வரும் அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் உடற்பயிற்சி கூடத்தில் ஒற்றைக்காலை மட்டும் தூக்கிபிடித்து, மற்றொரு காலை தரையில் குந்த வைப்பது போன்று தசைபயிற்சி சவாலுக்கு அழைக்கும் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த சவால் குறித்த வீடியோ 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், இங்கே வலிமை மற்றும் சமநிலை சிக்கல் உள்ளது. மக்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறினார். மற்றொரு பயனர், இந்த சவால்களை யார் உருவாக்குகிறார்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார். ஒரு பயனர், நான் இதை முயற்சித்தேன். கிட்டத்தட்ட என் நோயை உடைத்தேன். அது உண்மையில் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது என பதிவிட்டார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News