செய்திகள்
ஜூலியானா என்ற பன்றி

அமெரிக்காவில் விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை

Published On 2019-11-12 19:30 GMT   |   Update On 2019-11-12 19:30 GMT
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் புதுமையாக 5 வயதான ஜூலியானா என்ற பன்றி, பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவில் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மன அழுத்தத்தை தவிர்த்து உற்சாகமாக பயணம் மேற்கொள்வதற்காக செல்லப்பிராணிகளை கொண்டு ‘வாக் பிரிகேட்’ என்ற பெயரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் புதுமையாக 5 வயதான ஜூலியானா என்ற பன்றி, பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன் உரிமையாளரான டாட்டியானா டானிலோவா என்ற பெண், அந்த பன்றிக்கு விமானியின் தொப்பியை அணிந்து, விரல்களில் நகச்சாயம் பூசி, அலங்காரம் செய்து விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு வரும் பயணிகள் இந்த பன்றியை பார்த்து, மிகுந்த உற்சாகம் அடைகின்றனர். ஒரு சிலர் அந்த பன்றியுடன் ‘செல்பி’ படம் எடுத்து செல்கிறார்கள்.
Tags:    

Similar News