செய்திகள்
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்

அமெரிக்காவில் இந்தியர்களின் வீட்டை குறிவைத்து திருடிய பெண்

Published On 2019-10-31 01:09 GMT   |   Update On 2019-10-31 01:09 GMT
அமெரிக்க வாழ் இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து திருடுவதையே வழக்கமாக கொண்டிருந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாகா காஸ்ட்ரோ (வயது 44). கொள்ளைக் கூட்டத்தின் தலைவி. கடந்த 2011 ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மிச்சிகன், நியூயார்க், ஜார்ஜியா, ஓகியோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பல வீடுகளில் தனது கொள்ளை கும்பலின் உதவியுடன் திருடி வந்தார்.

இந்தநிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது மிச்சிகன் கோர்ட்டு, சாகா காஸ்ட்ரோவுக்கு 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

காஸ்ட்ரோவை தலைவியாக கொண்ட அந்த கும்பல், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து திருடுவதையே வழக்கமாக கொண்டிருந்தனர். வீட்டின் உரிமையாளர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி உடை அணிந்து சென்று திருடுவது அந்த கும்பலின் வாடிக்கையாகும்.
Tags:    

Similar News