செய்திகள்
லோட்டே ஷெரிங் - பிரதமர் மோடி

இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு வரலாற்றில் இடம் பெறும் -பூடான் பிரதமர் புகழாரம்

Published On 2019-09-07 07:22 GMT   |   Update On 2019-09-07 10:42 GMT
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பும், தைரியமும் வரலாற்றில் இடம் பெறும் என பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், பாராட்டி பேசியுள்ளார்.
திம்பு:

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறக்க முற்பட்டபோது எந்தவித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரையாற்றும்போது அங்கிருந்த பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர்.



இந்நிலையில் பிரதமர் மோடி உரையாற்றிவிட்டு சென்றபோது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதார். இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் சிவனை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, கடின உழைப்பு குறித்து பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் கூறிய வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் இன்று பெருமை படுகிறோம். சந்திரயான் 2 கடைசி நிமிடத்தில் சில கடுமையான சவால்களைக் கண்டது.

ஆனால், இதற்கான உங்கள் கடின உழைப்பும், தைரியமும் வரலாற்றில் இடம் பெறும். பிரதமர் மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவரும், அவரது இஸ்ரோ குழுவும் நிச்சயம் ஒருநாள் அதை சாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என கூறியுள்ளார்.

Tags:    

Similar News