செய்திகள்
பிரதமர் மோடி

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி செப்டம்பர் 28ல் உரையாற்றுகிறார்

Published On 2019-08-01 08:53 GMT   |   Update On 2019-08-01 08:53 GMT
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உரையாற்ற உள்ளார் என ஐநா சபை தெரிவித்துள்ளது.
நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் பொது சபை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர். அதன்படி செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றுகிறார். செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு தொடர்பான உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் 74-வது உலகத்தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அவர் தனது நியூயார்க் பயணத்தின் போது பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என தெரிவித்துள்ளது.

நியூயார்க் செல்லும்முன் செப்டம்பர் 22-ம் தேதி ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி.

ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொது சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு முதல்முறையாக பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News