செய்திகள்
சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீர்

பிரேசிலில் கனமழை எதிரொலி - 13 பேர் பலி

Published On 2019-07-25 02:55 GMT   |   Update On 2019-07-25 02:55 GMT
பிரேசில் நாட்டில் பெய்துவரும் கனமழனி எதிரொலியால் அங்கு 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
ரியோ டி ஜெனிரோ:

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. மழைதொடர்பான விபத்துகளில் ரெசியில் 5 பேர், ஒலிண்டவில் 3 பேர், அப்ரன் லிமாவில் 5 பே ர்ன மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கி தத்தளிக்கின்றன. சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.



மழையின் போது பலத்த காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் துரித கதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News