செய்திகள்
ஏர் இந்தியா விமானம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா அனுமதி

Published On 2019-07-16 14:34 GMT   |   Update On 2019-07-16 14:34 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
துபாய்:

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம்  இன்று முதல் புதிதாக தொடங்கியது.

இந்த புதிய விமான சேவையை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், விமான சேவையை பார்வையிட அமீரகம் வந்திருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஸ்வானி லோகனி இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவரிடம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்லும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி அளிக்கவேண்டும் என அமீரகம் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.



இந்தியர்களின் வேண்டுகோளையத்து பேசிய அஸ்வானி லோகனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ சுமை வரை கொண்டு செல்லலாம் என அனுமதி வழங்கினார்.

ஏற்கனவே 30 கிலோ சுமை வரை கொண்டு செல்ல அனுமதி இருந்தநிலையில் தற்போது அந்த அளவு 40 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது.
Tags:    

Similar News