செய்திகள்

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்குள் கடும் மோதல் - சஜித் புதிய தலைவராகிறார்

Published On 2018-10-29 10:37 GMT   |   Update On 2018-10-29 10:37 GMT
இலங்கை அரசியல் களத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

கொழும்பு:

இலங்கை அரசியல் களத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சிக்குள் முரண்பாடு ஏற்படுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும் பான்மையை நிரூபித்துக் காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சஜித்தை பிரதமராக்க முடிவு செய்துள்ளனர்.


இந்த யோசனையினால் தான் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சஜித் குழுக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அதிபர் சிறிசேனாவுக்கு, ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரம் அடைந்துள்ளது.

இக்காலகட்டத்தில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்கும் பட்சத்தில் சுமூகமாக செயல்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே சஜித் பிரேமதாசா தலைமையில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் அரசு அமைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் நம்புகின்றனர்.

அதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் அதுவரை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கருதுகின்றனர். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

Tags:    

Similar News