செய்திகள்

தலிபான்களின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் வாக்குப்பதிவு துவங்கியது

Published On 2018-10-20 04:58 GMT   |   Update On 2018-10-20 04:58 GMT
ஆப்கானிஸ்தானில் தேர்தலை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு கட்ட தாக்குதல்களை நடத்திவந்த நிலையில், இன்று காலை வாக்குப்பதிவுகள் துவங்கியது. #AfghanistanPolling #Taliban
காபுல்:

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

மேலும், பொய்யான தேர்தல் முறையை புறக்கணிக்குமாறு மக்களிடமும் தலிபான்கள் எச்சரித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று கவர்னர் அலுவலகத்தில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கந்தஹார் மாகாணத்துக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #AfghanistanPolling #Taliban
Tags:    

Similar News