செய்திகள்

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழி இந்தி - ஆய்வில் தகவல்

Published On 2018-09-21 10:29 GMT   |   Update On 2018-09-21 10:29 GMT
அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #America #Hindi #India
நியூயார்க்:

அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 21.8 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் அயல் மொழி பேசுவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தியை 33 சதவீதம் பேரும், குஜராத்தி மற்றும் தெலுங்கை 17 சதவீதம் பேரும் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின்படி கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

அயல் மொழி பேசுவோரின் எண்ணிக்கை முக்கிய நகரங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருப்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. #America #Hindi #India
Tags:    

Similar News