செய்திகள்

மலைமுகட்டில் கார் விபத்து - 7 நாட்களாக ரேடியேட்டர் நீரை குடித்து மரணத்தை வென்ற அமெரிக்க இளம்பெண்

Published On 2018-07-16 13:10 GMT   |   Update On 2018-07-16 13:10 GMT
கலிபோர்னியா மலைமுகட்டில் கார் விபத்தில் சிக்கிய இளம்பெண், ரேடியேட்டர் நீரை மட்டுமே குடித்து 7 நாட்கள் உயிர் வாழ்ந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #California
நியூயார்க்:

கலிபோர்னியாவில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற 23 வயது பெண் போலந்தில் இருந்து தனது சகோதரி வீட்டுக்கு ஜூலை 6-ம் தேதி காரில் சென்றுள்ளார். ஆனால் அவர் தனது சகோதரியின் வீட்டுக்கு செல்லாததால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனர். பிக் சர் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட ஜோடி, ஒரு பெண் காயங்களுடன் மலைமுகட்டில் விபத்தில் சிக்கியிருப்பதை கண்டனர்.



சிக்கியிருந்த பெண்ணை மீட்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த பெண் ஏஞ்செலா ஹெர்னாண்டஸ் என பின்னர் தெரியவந்தது. இதுதொடர்பாக, ஏஞ்செலாவை மீட்டவர்கள் கூறும்போது, ஏஞ்செலாவை மீட்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், தோள்பட்டையில் காயங்கள் இருந்ததாகவும் கூறினர்.

7 நாட்களாக உடலில் காயத்துடன் தனிமையில் உயிர்தப்பிய ஏஞ்செலா குறித்து பேசிய நெடுஞ்சாலை அதிகாரி, 7 நாட்களாக உணவு இன்றி, தான் சென்ற காரின் ரேடியேட்டரில் இருந்த நீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

சாலையில் செல்லும்போது வனவிலங்கு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க முயற்சிக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக ஏஞ்செலா தெரிவித்தார். தற்போது ஏஞ்செலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். #California
Tags:    

Similar News