செய்திகள்

சர்வதேச யோகா தினம் - ஐ.நா. சபையில் பிரம்மாண்ட ஏற்பாடு

Published On 2018-06-20 09:13 GMT   |   Update On 2018-06-20 09:13 GMT
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமை செயலகத்தில் நாளை நடைபெற உள்ள சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #UN #Yogaextravaganza #InternationalYogaDay2018

நியூயார்க்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் யோகா தினத்தை கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. சபையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த ஒரு புகைப்படத்தை ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பருதீன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் சார்பில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலியை பயன்படுத்தி நான் இருக்கும் இடத்திற்கு அருகில் யோகா குறித்த நடவடிக்கைகள் நடுக்கும் இடங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். #UN #Yogaextravaganza #InternationalYogaDay2018
Tags:    

Similar News