செய்திகள்

அடிப்படை மனித உரிமைகளின் முக்கிய எதிரி பயங்கரவாதம் - சுஷ்மா சுவராஜ் பேச்சு

Published On 2018-04-24 07:05 GMT   |   Update On 2018-04-24 07:05 GMT
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கு முக்கிய எதிரியாக பயங்கரவாதம் விளங்குவதாக கூறினார். #sushmaswaraj #SCO
பீஜிங்:

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் ஷாங்காய் நகரில் தொடங்கியது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் இன்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கு முக்கியமான எதிரி பயங்கரவாதமாகும். இது மனிதர்களின் வாழ்க்கை, அமைதி மற்றும் வளமான வாழ்வை அளித்து விடும். பயங்கரவாதத்தை அனுமதிக்கும் மற்றும் ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக போராடி பயங்கரவாத அமைப்புகளை அழிக்க வேண்டும்.

உலகில் தற்சமயம் பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலிருந்து நாட்டை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே போல் வர்த்தகத்தில் ஏற்படும் தடைகளை தவிர்க்க வழிமுறைகள் கொண்டு வர வேண்டும். வெளிநாட்டு பொருள்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் தடைகளை நீக்க வேண்டும். இந்தியா ஷாங்காய் கூட்டுறவு அமைப்புடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. இதன் மூலம் நம்முடைய பொருளாதாரம் வளர்ச்சியடையும். உலகளாவிய பொருளாதாரம் மிகவும் வெளிப்படையாகவும், சமநிலை கொண்டதாகவும் உள்ளது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார். #sushmaswaraj #SCO
Tags:    

Similar News