செய்திகள்

புனரமைப்புக்கு பின்னர் சிங்கப்பூர் பெருமாள் கோயில் திறப்பு - பிரதமர் தலைமையில் பக்தர்கள் திரண்டனர்

Published On 2018-04-23 11:12 GMT   |   Update On 2018-04-23 11:12 GMT
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் ரூ.22 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட 164 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் மஹாசம்ப்ரோக்‌ஷனம் நிகழ்ச்சியில் பிரதமர் தலைமையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் 1854-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சிங்கப்பூரின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

விரைவில் மாமாங்கம் நெருங்கும் நிலையில் காலப்போக்கில் பொலிவிழந்து காணப்பட்ட இந்த ஆலயத்தை சுமார் 45 லட்சம் சிங்கப்பூர் டாலர் செலவில் புனரமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த பணிகளுக்காக இந்தியாவில் இருந்து 20 ஸ்தபதிகளை கொண்ட குழுவினர் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஈடுபட்டு வந்தனர்.

இதைதொடர்ந்து, பொலிவுப்படுத்தப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் நேற்று மீண்டும் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.


சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்செய்ன் லூங் மற்றும் அவரது தலைமையில் 4 மந்திரிகள் உள்பட சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் இந்த மஹாசம்ப்ரோக்‌ஷனம் விழாவில் கலந்து கொண்டனர்.

2004-ம் ஆண்டு சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்து ஆலய விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்றைய விழாவுக்கு பின்னர் தொடர்ந்து 45 நாட்களுக்கு கோலாகலமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும், பின்னர் இந்த ஆலயத்தின் ‘மண்டல அபிஷேகம்’ வெகு சிறப்பான முறையில் நடைபெறும். #Tamilnews
Tags:    

Similar News