செய்திகள்

அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை

Published On 2018-04-20 11:24 GMT   |   Update On 2018-04-20 11:24 GMT
அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நேற்று ஓட்டெடுப்பின் போது சபைக்குள் நுழைந்து பிறந்து 11 நாட்களே ஆன கைக்குழந்தை சிறிய வரலாற்றை தன்வசப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய தலைவராக ப்ரிடென்ஸ்டைன் என்பவரை அதிபர் டிரம்ப் நியமித்தார். ஆனால், இதற்கு பாராளுமன்ற செனட் சபையின் ஆதரவு முக்கியம். இதற்காக நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது.

இல்லினாய்ஸ் மாகாண ஜனநாயக கட்சி செனட் உறுப்பினராக டாம்மி டக்வொர்த், பிறந்து 11 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் ஓட்டெடுப்புக்கு வருகை தந்தார். ஓட்டெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளை சபைக்கு அழைத்து வருவது தொடர்பான விதி கடந்த புதன்கிழமை திருத்தப்பட்டது.

இதன்மூலம், ஓட்டெடுப்பின் போது செனட் சபைக்குள் நுழைந்த முதல் குழந்தை என்ற சாதனையை அக்குழந்தை பெற்றுள்ளது. முன்னாள் ராணுவ வீராங்கணையான டாம்மி டக்வொர்த் ஈராக் போரின் போது தனது இரு கால்களையும் இழந்து விட்டார்.

வாக்கெடுப்பின் முடிவில் 50 உறுப்பினர்கள் ஆதரவு, 49 உறுப்பினர்கள் எதிர்ப்பு என்ற நூலிலை வித்தியாசத்தில் ப்ரிடென்ஸ்டைன் நாசா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. #TamilNews
Tags:    

Similar News