செய்திகள்

அமெரிக்கா நடத்திய தாக்குதல் பயங்கரவாதத்தை இன்னும் தீவிரமாக ஒடுக்க உதவும் - சிரியா அதிபர் சபதம்

Published On 2018-04-14 12:04 GMT   |   Update On 2018-04-14 12:04 GMT
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியா மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை வெகு தீவிராக வேட்டையாட உதவும் என பஷர் அல் ஆசாத் குறிப்பிட்டுள்ளார். #assad
டமாஸ்கஸ்:

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள் வீசி தாக்குல் நடத்தின.

தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த தாக்குதலை அமெரிக்காவின் பகைநாடான ரஷியாவும், ஈரானும் வன்மையாக கண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகள் சிரியா மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் கிளர்ச்சியாளர்களை இன்னும் வெகு தீவிராக வேட்டையாட உதவும் என பஷர் அல் ஆசாத் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் ஒவ்வொரு அங்குலம் பகுதியிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் போரில் சிரியா அரசும், மக்களும் மிக தீவிரமாக செயல்பட இந்த தாக்குதல் வகை செய்துள்ளது என ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியிடம் அவர் தெரிவித்துள்ளார். #tamilnews  #assad 
Tags:    

Similar News