செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஸ்டேடியம் அருகே கார் குண்டு தாக்குதல்- 12 பேர் பலி

Published On 2018-03-23 16:26 GMT   |   Update On 2018-03-23 16:26 GMT
ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஸ்டேடியம் அருகே கார் குண்டு வெடித்து சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். #Afghanistanattacks #killed
காபூல்:

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை இனத்தவரான ஷியா முஸ்லிம்களின் புத்தாண்டான நவுருஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆப்கானில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்னதினம் காபூலில் உள்ள மசூதியில்  தொழுகை நடந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினான். இதில் 29 பேர் பலியாகினர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஹெல்மாண்ட் மாகாணத்தில் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லஷ்கர் கா பகுதியில் உள்ள ஸ்டேடியத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், நிகழ்ச்சி முடிந்ததும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்டேடியத்திற்கு வெளிப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்துச் சிதறியது. 

இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். #tamilnews  #Afghanistanattacks #killed
Tags:    

Similar News