செய்திகள்

முடிவில்லாத ஒரு துயரம் - அமெரிக்கா பள்ளியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

Published On 2018-03-20 13:50 GMT   |   Update On 2018-03-20 13:50 GMT
அமெரிக்காவின் கிழக்கே மெரிலான்ட் மாநிலத்தில் உள்ள பிரபல பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் இருந்து சாலை வழியே சுமார் 90 நிமிட பயண தூரத்தில் மெரிலான்ட் மாநிலம் அமைந்துள்ளது,

இம்மாநிலத்துக்கு உடபட்ட செயின்ட் மேரிஸ் கவுன்ட்டியில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்பது தொடர்பான விபரம் வெளியிடப்படாத நிலையில் அங்கு இருந்த புலனாயுவுத்துறை போலீசார் எதிர்தாக்குதல் நடத்தியதாகவும், சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பள்ளிக்குள் நுழைந்த போலீசார் அங்கிருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய நிலையில் அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் பள்ளிகளில் 16 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #TamilNews
Tags:    

Similar News