செய்திகள்

சூரியப் புயல் இன்று பூமியை தாக்கும் அபாயம்- நாசா

Published On 2018-03-14 05:09 GMT   |   Update On 2018-03-14 05:09 GMT
சூரிய புயல் இன்று பூமியை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சூரிய புயல் பூமியை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சூரியனின் மேற்பரப்பில் 2 மிகப்பெரிய பிரமாண்டமான தீப்பிழம்புகள் உருவாகின்றன. அது வழக்கத்தை விட அதிக திறனுடன் பூமியை நோக்கி பாயும்.

பின்னர் பூமியின் காந்த விசையுடன் மோதி கரும் புயலாக உருவெடத்து தாக்கும். இதனால் பூமியின் இயற்கை தன்மை பாதிக்கும்.



தற்போது பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூரிய புயல் தாக்குதலால் செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.

விமானங்களின் ‘ஜி.பி.எஸ்.’ சிஸ்டமும் பாதிக்கும். பூமியில் சில இடங்களில் மின் வினியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளன. #tamilnews
Tags:    

Similar News