செய்திகள்

ரெக்ஸ் டில்லர்சனை வீட்டுக்கு அனுப்பினார் டிரம்ப் - புதிய உள்துறை மந்திரி நியமனம்

Published On 2018-03-13 13:14 GMT   |   Update On 2018-03-13 13:14 GMT
அமெரிக்க உள்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சி.ஐ.ஏ இயக்குநர் மைக் பாம்பியோ அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். #TrumpSacksTillerson
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஆண்டு பொறுப்பேற்றதும் அவருக்கு நெருக்கமாக இருந்த எக்ஸோன் மொபில் சி.இ.ஓ ரெக்ஸ் டில்லர்சனை உள்துறை மந்திரியாக நியமித்தார். இந்நிலையில், உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து டில்லர்சன் நீக்கப்பட்டு, புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ இயக்குநராக இருக்கும் மைக் பாம்பியோ புதிய மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.ஐ.ஏ அமைப்பின் துணை இயக்குநராக இருந்த கினா ஹாஸ்பெல் புதிய சி.ஐ.ஏ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ இயக்குநராக நியமிக்கப்ட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை கினா ஹாஸ்பெல் பெற்றுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் இந்த நியமனங்களை அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வடகொரியா - அமெரிக்க இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்த போது டில்லர்சன் பேச்சுவார்த்தை மூலம் இதனை தீர்க்கலாம் என கூறிவந்தார். ஆனால், போர் நடத்தும் முடிவில் இருந்த டிரம்ப், டில்லர்சனின் கொள்கையை கடுமையாக விமர்சித்தார்.

அப்போதே, அவர்கள் இருவருக்கும் கருத்து மோதல் நிலவி வந்தது. டில்லர்சன் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற நிலை நீடித்தது. டில்லர்சனும் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடியை எடுத்திருந்தார். இந்நிலையில், அவர் பதவியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். #TrumpSacksTillerson #Trump #CIA #TamilNews
Tags:    

Similar News