search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்துறை மந்திரி"

    • நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும்.
    • நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுச் சபை நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது:

    195 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இன்டர்போல் அமைப்பு உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணத்திலும், திருக்குறள் போன்ற அறநூல்களிலும் நீதி குறித்து கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் குற்றங்களை கட்டுப்படுத்துதல், நீதி வழங்குதல், வெற்றிகரமான நிர்வாகம் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ள பல முன் முயற்சிகளை இந்திய அரசு எடுத்துள்ளது.

    பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பொருளாதார குற்றங்களை முறியடிக்க தேசிய அளவில் தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களை முறியடிக்கவும், சட்டவிரோத பணபரிவர்த்தனையை தடுக்கவும், திட்டமிடப்பட்ட சதிச்செயல்களை முறியடிக்கவும் இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையை 89,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

     கலோல்:

    குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்ற திறந்து வைத்தார். மேலும் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 


    ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். பிரமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம், 60 கோடி ஏழை மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சுகாதார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ. 64,000 கோடி முதலீட்டில் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 35,000 புதிய அவசர கால சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த 2013- 14ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், 2021 -22ம் ஆண்டில் அதன் எண்ணிக்கையை 596 -ஆக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 51,000-ல் இருந்து 89,000-மாகவும், முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 31,000-ல் இருந்து 60,000-ம் ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரே நாடு, ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது.
    • ஆயுதப் படை வீரர்களின் தியாகத்தை நாடு என்றும் மறக்காது.

    ஃபதேபூர்:

    பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்திய-நேபாள எல்லை பகுதிகளை ஆய்வு செய்தார். பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து, பணியாளர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார். 


    பின்னர் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 


    நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆயுதப் படை வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நாடு என்றும் மறக்காது.

    எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு,ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும்.
    • நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

    சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமை கொள்ளும் தினம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

    நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துவதாகவும் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

    வலுவான, தன்னிறைவு மிக்க இந்தியா குறித்து நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்ட கனவை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்தியாவை மீண்டும் விஸ்வ குருவாக மாற்றுவதற்கு, கடின உழைப்பின் மூலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×