search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முறியடிக்க  நடவடிக்கை- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
    X

    உள்துறை மந்திரி அமித்ஷா

    பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முறியடிக்க நடவடிக்கை- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

    • நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும்.
    • நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுச் சபை நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது:

    195 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இன்டர்போல் அமைப்பு உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணத்திலும், திருக்குறள் போன்ற அறநூல்களிலும் நீதி குறித்து கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் குற்றங்களை கட்டுப்படுத்துதல், நீதி வழங்குதல், வெற்றிகரமான நிர்வாகம் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ள பல முன் முயற்சிகளை இந்திய அரசு எடுத்துள்ளது.

    பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பொருளாதார குற்றங்களை முறியடிக்க தேசிய அளவில் தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களை முறியடிக்கவும், சட்டவிரோத பணபரிவர்த்தனையை தடுக்கவும், திட்டமிடப்பட்ட சதிச்செயல்களை முறியடிக்கவும் இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×